பெண் கடத்தலில் தமிழ்நாடு முதலிடம் - அதிர்ச்சிச் செய்தி!

இந்தியாவில் 1 லட்சத்து 35ஆயிரம் பெண்களும் 61,000குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் எச்.பி.சௌத்ரிதெரிவித்துள்ளார்.


 பெண்கள் மற்றும் குழந்தைகள்கடத்தப்படுவதை தடுக்க 150 சிறப்பு புலனாய்வுப் பிரிவுகள்அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்மத்திய-மாநில அரசுகள்  மேற்கொண்ட  முயற்சி யின் காரணமாக  9,146பெண்களும்  19,742குழந்தைகளும்மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

கடத்தப்பட்டுள்ள பெண்கள் மற்றும்குழந்தை களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இதுமிகவும் குறைவே.பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து அமைச்சர்தெரிவித்துள்ள எண்கள் வெறும்புள்ளி விபரம் அல்ல
 கடத்தப்பட்ட பெண்கள் மற்றும்குழந்தைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் தாங்க முடியாத சோகம் ஒளிந்துள்ளது.
  2009-12ஆண்டு  கணக்கெடுப் பின்படி  பெண்கள் மற்றும்  குழந்தைகள் கடத்தப்படுவதில் தமிழ்நாடு  முதல் இடத்திலும்,  ஆந்திர, கர்நாடகா இரண்டு,   மூன்றாம் இடங்களில் உள்ளன.

 ‘மிளிரும்தமிழகத்திற்கு’ இது பெருமை சேர்ப்பதாக இல்லை.பெண்கள் மற்றும்குழந்தைகள் கடத்தப்படு வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளனபாலியல்தொழிலில்  ஈடுபடுத்தப்படுவதற்காகவே  பெண்கள்  பெரும்பாலும் கடத்தப்படுகிறார்கள்இதே நோக்கத்திற்காகவே  பெரும்பாலும்  சிறுமிகளும் கடத்தப்படுகிறார்கள்  என்பது  அதிர்ச்சியளிக்கும்  உண்மை
  கொத்தடிமைத்  தொழிலில்  ஈடுபடுத்துவதற்காகவும், அங்கஹீனமாக்கி  பிச்சை எடுக்க  வைப்பதற்காகவும்கொலை செய்து  உடல்உறுப்புகளை  திருடுவதற்காகவும்   பெரும்பாலும்  குழந்தைகள்  கடத்தப்படுகிறார்கள்  என்று  தன்னார்வ  தொண்டு  நிறுவனம்ஒன்று  கடத்தலுக்கான காரணங்களை  பட்டியலிடு கிறது. மனிதக் கடத்தலில்  தென்மாநிலங்கள்தான்  முதல் இடத்தில் உள்ளன.

தமிழகம்கர்நாடகம்ஆந் திரம்கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் ஒவ் வொரு ஆண்டும்300 வழக்குகள் பதிவாகின்றனபெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலைப் பொறுத்தவரைஅரசு தெரிவித்துள்ள புள்ளி விபரம்முழுமையானது அல்லஉண்மையில் பல புகார்கள்காவல்நிலையங்களில் முறையாகப் பதிவு செய்யப் படுவதில்லை

பெண்கள் மற்றும்குழந்தைகள் காணாமல் போவது அல்லது கடத்தப்படுவது என்பது தனித்த நிகழ்வுகள் அல்ல.இதன் பின்னால் மிகப்பெரிய வலைப்பின்னல் உள்ளதுகாவல்துறையினருக்கு தெரியாமல்இவ்வளவு பெரிய கும்பல் செயல்படுவது சாத்தியமல்ல

 சில சமயங்களில்காவல்துறையினரும் கூட இந்த கயமைத்தனத்திற்கு உறுதுணையாக இருந்து வருவதுகுறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.

 குறிப்பாக பாலியல் தொழில் மற்றும் கொத்தடிமையாக சுரண்டப்படுவோர் குறித்து எளிதாககாவல்துறையினரால் கண்டறிந்து விட முடியும்ஆனால் பெரும்பாலும் தன்னார்வத்தொண்டுநிறுவனங்கள் மற்றும் ஊடகங்களே கொத்தடிமைத் தொழிலாளர் குறித்து உலகின்கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்
 இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய-மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு புல னாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்துசெயல்பட வேண்டும்தொடரக் கூடாது மனித மாண்பை கேள்விக்குள்ளாக்கும் இந்த அவலம்.
------------------------------------------
நன்றி - திரு.சூரியன், மதுரை -http://bsnleumadurai.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக