வீரத் துறவி விவேகானந்தர்!

வீரத் துறவி சுவாமி விவேகானந்தர்!
புதுக்கோட்டை-ஜனவரி-11.
கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவரிடையில் இந்திய அரசின் நேரு யுவக்கேந்திரா சார்பில் நடந்த சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், “மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் வேறுபாடு கருதக் கூடாது எனும் பொருளில்தான், சிக்காக்கோவில் நடந்த உலக சமயமாநாட்டில், “சகோதரர்களே சகோதரிகளே!“ என்று அழைத்து உலகத்தையே உறவு கொண்டாடினார் சுவாமி விவேகானந்தர்“ என்றார்
விழாவிற்குத வெங்கடேஸ்வரா கல்விக் குழுத்தின் தலைவரும் கவிஞருமான ஆர்.எம்.வீ. கதிரேசன் தலைமையேற்று, விவேகானந்தருக்குக் கவிதாஞ்சலி பாடினார். தொடர்ந்து, சாலை விபத்துத் தடுப்பு மற்றும் மீட்புப் பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி கே.மோகன்ராஜ், வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரித் தாளாளர் பி.கருப்பையா, பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி, புதுக்கோட்டைக் கவிஞர் நா.முத்துநிலவன், சிறப்புரையாற்றினார்.



கல்லூரித் தலைவர் கதிரேசன், தாளாளர் கருப்பையா(வலது),
இடப்பக்கம் நேரு யுவக்கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், பேராசிரியர் முனைவர் ஞானசுந்தரத்தரசு ஆகியோர் முன்னிலையில் மாணவ-மாணவியர்க்குப் பரிசளிக்கிறார் கவிஞர் நா.முத்துநிலவன்
------------------------------------------------

     “இன்றைய இளைஞர்களுக்கும் ஏற்ற வழிகாட்டியாகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். “துறவி என்னும் பெயரோடு, எதையும் துறந்துவிடாமல், பணத்தைச் சேர்த்துக்கொண்டே ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய பல சாமியார்களுக்கு மாற்றாக, 39வயதிலேயே காலமாகி 112 ஆண்டுகள ஆனபிறகும் இந்தியநாடு முழுவதும் இன்றும்கூட நினைக்கப்படுகிறார் என்றால் அவர்தான் உண்மையான வீரத்துறவி விவேகானந்தர் ஆவார்.
     வங்காளத்தின் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பின் பிறகு ஸ்ரீராமகிருஸஷ்ணரைச் சந்தித்து அவரையே குருவாக ஏற்று, அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த உலகச் சமய மாநாட்டில், இந்திய இந்துமதப் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட போதுதான் அவரது புகழ்பெற்ற, “சகோதர சகோதரிகளே!என்னும் உரை நிகழ்ந்தது. 
ஒரு பேச்சின் நூற்றாண்டுக்குப் புத்தகம் வெளியிட்டு, கொணடாடபட்டது சுவாமி விவேகானந்தரின் பேச்சேயாகும். 
      மற்றவரெல்லாம் “லேடீஸ் அன் ஜென்டில்மென்“ என்று அழைத்துப் பேசியபோது, விவேகானந்தர் தான் “சகோதர சகோதரிகளேஎன்று அழைத்து, சாதாரணமான சாமியாராகச் சென்று, உலக மக்களையெல்லாம் உறவாக்கி, உலகப் புகழோடு இந்தியா திரும்பினார். 
அதன் பின், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தனது நாவால் நடந்து திரிந்து, இந்திய இளைஞர்களை தேசப்பற்றோடும், தன்னைப் பற்றிய புரிதலோடும் வாழ அழைத்தார். அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசபக்தர்களாகவும், பெண்களை மதிப்பவர்களாகவும், நல்லநோக்கத்தோடு வாழ்வை நடத்தவேண்டும் என்னும் உறுதி மிக்கவர்களாகவும் உருவானார்கள். விவேகானந்தரின் புகழ்பெற்ற சீடர்தான், பாரதியின் ஞானகுருவாகத் திகழ்ந்தார்.

     விவேகானந்தரின் அன்புக்குரிய சீடர்களில் ஒருவரான சகோதரி நிவேதிதா தேவியை மகாகவி பாரதி, காசியில் சந்தித்த போதுதான், “நீ ஏன் உன் மனைவியை அழைத்துவர வில்லை, பெண்களை விட்டு விட்டு ஆண்கள் மட்டும் செய்யும் எந்தப் பொதுநலச் சேவையும் முழுவெற்றி பெற முடியாதே!“ என்று அதிர்ச்சியூட்டி பாரதியைத் திருத்திய பெருமை சகோதரி நிவேதிதை தேவியையே சாரும்! அந்தச் சகோதரியை அறிவார்ந்த ஞானத்துறவியாக்கிய பெருமை விவேகானந்தரைச் சாரும்!

      கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆனால் இதற்குப் பதிலாக, நாம் வெறும் மேற்பூச்சுப் பூசி அழகு படுத்த முயன்றுவருகின்றோம். அகத்தே ஒன்றும் இல்லாதபோது, புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன் என்று உணர்ச்சிகரமாகக் கேட்டவர் விவேகானந்தர்.
தேச விடுதலைப் போராட்டத்தில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பில்லாமல் 1902ஆம் ஆண்டெ அவர் காலமாகிவிட்டாலும், பாரதி, நேருபோலும் தேசவிடுதலைப் போராட்ட வீர்ர்கள் பலருக்கும் அவரே வழிகாட்டியாகத் திகழ்ந்ததாக ஜவகர்லால் நேரு தெரிவிக்கிறார். “கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதை நாம் உணரவேண்டும், அப்படி இல்லை யெனில் பாசாங்கு போடாத நாத்திகனாக இருப்பதே மேல்“ என்று உண்மையான அறிவைத் தூண்டியவர்  
     “என் குழந்தைகளாகிய நீங்கள், சுயநலம் என்பதைத் தூர எறிந்து, வேலை செய்யுங்கள்“ என்ற அவரது பேச்சு, எழுத்து, நேர்காணல்களைத் தொகுத்து, “பசித்திரு, விழித்திருஎனப் பற்பல தொகுதிகளாக வந்திருக்கும் அவரது புத்தகங்களே இன்றைய இந்திய இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன“ என்றார்.

              மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்ற மாணவ-மாணவியர் விவரம் வருமாறு- கட்டுரைபோட்டியில்  முத்துமீனாட்சி, முருகானந்தம், நாகேந்திரன், ஓவியப் போட்டியில் அருண்குமார், பெனட்சாமுவேல்கெளதம், கவிதைப் போட்டியில் கார்திகா வனரோஜா, முத்துமீனாட்சி, சபரிவாசன் பேச்சுப் போட்டியில் முருகானந்தம், முத்துமீனாட்சி, விக்னேஷ் 

    முன்னதாக, நேரு இளையோர் மையத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சதாசிவம் வரவேற்க, கல்லூரி முதலர்வர் வேத.நாராயணன் வாழ்த்துரைக்க, ஆசிரியர் திருமலை விழாநிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்க, துறைதலைவர் மகேஷ்ராம்நன்றி கூறினார்.

    போட்டிகளில் கலந்துகொண்டவர்களோடு, பேராசிரியர்களும்,மாணவ-மாணவியருமாக ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
--------------------------------- 
நன்றி - 
தினமணிச் செய்தியாளர் திரு மோகன்ராம் , புதுக்கோட்டை
புகைப்படம் - திரு “டீலக்ஸ்” ஞானசேகரன், புதுக்கோட்டை

8 கருத்துகள்:

  1. ஒய்வு பெற்றபின்தான் சற்றும் ஓய்வின்றி தேனியாய் சுற்றிவந்து அருங்கருத்துகள் அள்ளித் தரும் முத்து நிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஐயா! தூங்குகிறீர்களா இல்லையா?
    நாளை சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  2. பள்ளிக்காலங்களில் விவேகானந்தர் நூல்களை படித்து பெருமையுடனும் வீரத்துடனும் இருந்து வந்தேன். ஒருவேளை எனக்கும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நானும் விவேகானந்தர் ஆகி இருப்பேன் ஹும்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  3. இன்றைய இளைஞர்கள் விவேகானந்தரைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அவரது புகைப்படத்தைப் பார்க்கும்போதே நமக்கு ஒரு கம்பீரம் வரும். கண்களும் அப்படியே. நல்ல நிகழ்வுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெண்களை விட்டு விட்டு ஆண்கள் மட்டும் செய்யும் எதுவுமே வெற்றி அடைவதில்லை...!

    பதிலளிநீக்கு
  5. வீரத்துறவி என்ற சொல் தேவையில்லை. அது ஹிந்துத்வாவினர் தங்கள் தொண்டர்களுக்கு மதவெறியேற்றப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சொல்.

    பதிலளிநீக்கு