இந்த ஆண்டின் எனது நூறாவது பதிவு - சமர்ப்பணம்


                                இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

இந்த 2013ஆம் ஆண்டின் எனது நூறாவது பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நம் நண்பர்களுக்குத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

“அறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும்
  அகத்திலே அன்பினோர் வெள்ளமும்”, இவற்றோடு சமூகப் பார்வையும் மிக்க நமது மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் இன்று தனது வலைப்பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதே அந்த எனது மகிழ்வான செய்தி!



இரண்டாண்டுக்கு முன் நான் வலைப்பக்கம் தொடங்கியபோது, “இணையப்பக்கங்களில் கிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் உங்கள் எழுத்துகள் ஒளிரட்டும்” என்று -புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அய்யா போலும்- நம் மதிப்பிற்குரிய நண்பர்கள் வரவேற்றார்கள். அது நானும் நீங்களும் எதிர்பார்த்த அளவிற்கு நடக்கவில்லை என்பதில் எனது பங்கே பெரிது!
எனினும், குணம்நாடிக் குற்றமும் நாடி...?

என்னைவிடவும் அரியபல இலக்கிய-இணையப் பணிகளை ஆற்றக்கூடிய வல்லமை பொருந்திய நம் நண்பர் இப்போது இணைய உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.

சுயவெளிப்பாட்டை விரும்பாத அவர் 
படைப்புகளை மட்டுமே வெளியிடுகிறார்!

அந்த வலைப்பக்கத்தைப் பார்த்து, நம் நண்பர்கள் 
சுதந்திரமாகத் தமது கருத்துகளை வெளிடலாம், 
வெறும் புகழ்ச்சி வேண்டாம்.

தமது இணையப் பக்கத்தை மேம்படுத்த விரும்பும் அவர், 
நண்பர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறார். 
நம்  நண்பர்கள் அவரது பின்னூட்டத்திலேயே இடலாம்.

முனைவர் மு.பழனியப்பன், இணைய எழுத்தாளர் எட்வின், திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார்,முதலானோர் வந்து சென்ற புதுக்கோட்டைக் கணினித்தமிழ்ப் பயிலரங்கின் பயன்தான் இது என்பதிலும் அவர்கள் பெருமையடையலாம்.

இது நிற்க.

எனது “சீனியர் வலைப்பக்க நண்பர்கள்” ஒப்புக்கொள்வார்கள் -
நல்லவிஷயங்களைவிடவும், பொழுதுபோக்கு விஷயங்களே இணையத்தில் அதிகம் படிக்கப் படுவதை! ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை! உலகநாடுகளின் விடுதலைப்போர்களில் வெறும் 3விழுக்காடு மக்கள்மட்டுமே நேரடியாகப் பங்கேற்றார்கள் என்பது நமக்குத் தெரியும்தானே?
இனி நிகழும் சமூக மாற்றங்களில் இணையத்தின் பங்கும் சிறப்பாக இருக்கும் என்பதில் என்ன சந்தேகம்?



எனவே... 
வாருங்கள் -புதிய இணைய நண்பரே!
புதியதோர் இணையம் செய்வோம்!- அக்கப் 
போர்நடக்கும் இணையத்தைப் புதிதாய் நெய்வோம்!




அவரது வலைப்பக்கம்http://nadainamathu.blogspot.in/

இந்த வலைப்பக்கத்துடன், புதுக்கோட்டை கணினித்தமிழ்ப் பயிலரங்கில் கலந்துகொண்டு தனது வலைப்பக்கத்தை உருவாக்கிய/மேம்படுத்திய நம் நண்பர்கள் சிலரின் இணைப்பு 
எனது வலைப்பக்கத்தில் “நண்பர்களின் வலைப்பக்கத் தையும் பாருங்க” எனும் இணைப்பில் உள்ளது. 
நண்பர்கள் பார்த்து, கருத்து மற்றும் ஆலோசனை வழங்கி-வளர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது பதிவுகளைப் பார்த்து அவ்வப்போது பின்னூட்டம் தரும் இணைய நண்பர்களுக்கே எனது இந்த ஆண்டின் எனது 100 பதிவுகளின் பலனை சமர்ப்பணம் செய்கிறேன்.

என்னையே வியக்கவைத்த வரவேற்பு!
சுமார் 50,000பக்கப்பார்வைகள்!
200ஐ நெருங்கும் நட்பு வட்டம்.
என் முயற்சிக்குப் பெரிதுதான் இது!
நான் இன்னும் பொறுப்பாக, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நம் நட்பு வட்டத்திடம் கற்றுக்கொள்கிறேன்.

நன்றி, நன்றி, நன்றி.
வணக்கங்கள் -
பலபல, பல்பல, பற்பல, பலப்பல!

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
மின்னஞ்சல் -muthunilavanpdk@gmail.com
அலைபேசி - 94431 93293
--------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. பல்வேறு பணிகளுக்கிடையிலும்
    பயனுள்ள பதிவுகள் நூறு தந்தது என்பது
    இமாலயச் சாதனையே
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே எனது பல்வேறு வேலைகளுக்கிடையில் எப்படி 100பதிவுகளை இட்டேன் என்று எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது நண்பரே!
      “ஊக்குவிக்க ஆளிருந்தால்,
      ஊக்கு விற்பன் கூட
      தேக்கு விற்பான்” என்னும் கவிஞர் வாலிதான் நினைவுக்கு வருகிறார். இது ஒரு பெருமையென்றால், அது நிச்சயமாக நம் நண்பர்களைத்தான் சேரும்! அதுதான் உண்மைச் சமர்ப்பணம்!

      நீக்கு
  2. வணக்கம்
    நூறாவது பதிவிற்கு என் இனிய வாழ்த்துக்கள்.எத்தனை நட்புக்கள்.எத்தனை பார்வையாளர்கள்..அம்மம்மா...சத்தான கருத்துக்களை முத்தாய் தந்திடும் அய்யாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கூடப் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை என்னும் குறைதீர்க்க வந்த ”ரெட்டைப் புலவர்” களில் ஒருவரே நன்றி.
      புதிய வலை நண்பர் யாரென்று தெரிந்துவிட்டதா?

      நீக்கு
    2. பார்த்தேன் தெரியலயே சார்

      நீக்கு
  3. நூறாவது பதிவிற்கு என் இனிய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரையை இப்போதுதான் பார்க்கிறேன். நன்றி. தங்கள் வாழ்த்துக்கு உரியவனாகத் தொடர ஆசை.

      நீக்கு
  4. வணக்கம்
    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல பதிவுகள் படைத்து சாதனை புரிவாயாக....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. 100 வது பகிர்வு - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா... புதிய தளத்தையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு அவரைத் தெரியாது. ஆனால் உங்களை அவருக்குத் தெரியும். உங்களைப் பற்றி எனக்கென்ன வியப்பு என்றால்... ஒரு குட்டிக்கதை சொல்வேன்- தமிழன் ஒருவன் பலபாடுபட்டு சந்திரனுக்கு முதன்முதலாகப் போனானாம்! இவன் நிலவில் காலடி வைத்தவுடன், “அகோ! வரணும் சகாவோ! ஒரு கரம் சாய் குடிக்கும்”னு சொல்லி அங்க டீக்கடை வச்சிருந்த மலையாளி வந்தானாம்! அது மாதிரி, பலபாடு பட்டு ஒரு புதிய வலைப்பக்கத்தைக் கண்டுபிடிச்சு உள்ள நுழைஞ்சு, படிச்சு ஒரு கமெண்ட் போட்டா அங்க, உங்க கமெண்ட் ஏற்கெனவே வரவேற்கும்! அது எப்டீங்க வலைச்சித்தரே உங்களுக்கு சாத்தியமாகுது? ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ்? வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  6. தங்களின் நூறாவது பதிவுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, உங்கள் வாழ்த்து ஆயிரமாவது பதிவுவரை தொடரும்படி நான் எழுத வாழ்த்துங்கள்.

      நீக்கு
  7. தங்கள் ஆக்கங்கள் தமிழ் இணையவுலகில் தனித்துவமானவை நண்பரே. தங்கள் ஆக்கங்களை நான் தொடர்ந்து படித்துவருகிறேன்.

    மேலும் பல்லாயிரம் படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தங்கள் ஆக்கங்கள் தமிழ் இணையவுலகில் தனித்துவமானவை” இந்த வரிகளை, தங்களைப் பற்றி இன்று எனது இனிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் சொன்னேன். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது? நன்றி அய்யா. நட்பு தொடரட்டும்.

      நீக்கு
  8. தங்களின் நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்! நாளும் பெருக வேண்டும் என்பது என் அவா ! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். தங்களின் (81?) பிறந்தநாளுக்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள். தங்களின் நூறாவது பிறந்த நாளுக்கு நானிருந்து வாழ்த்த என்னை வாழ்த்துங்கள் அய்யா!

      நீக்கு
  9. வணக்கம் அய்யா,
    இந்த ஆண்டின் நூறாவது பகிர்வுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள். புதிய உதயம் யாரென்று கொஞ்சம் அறிந்து கொண்டேன். எனது வலைப்பக்கத்தையும் அறிமுகம் செய்ததற்கு உளமார்ந்த நன்றி அய்யா. பதிவில் தங்களது தன்னடக்கம் பளிச்சிடுகிறது. தங்களோடு இணைந்தும், வழிகாட்டதலோடும் சமுதாயத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசை அரும்பியுள்ளது. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்துகொண்டதை யெல்லாம் வெளியில் சொல்லாமல் -இலைமறை காய்போல- எழுதுவதே இலக்கியம் இல்லையா பாண்டியன்? உங்கள் வளர்ச்சி அபாரம்... இன்னும் வளர வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  10. இந்த வருடத்தின் 100வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
    அருமையான பகிர்வுகளை தொடர்ந்து வாசிக்கத் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கவும் பாராட்டவும் நீங்கள் இருக்கும்போது எழுத எனக்கென்ன கசக்கிறதா குமார்? எழுதுவோம்.. இயங்குவோம்! தொடர்ந்து இணைந்து ஏதாவது செய்துகொண்டே இருப்போம் நன்றி.

      நீக்கு
  11. இந்த 2013ஆம் ஆண்டின் எனது நூறாவது பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நம் நண்பர்களுக்குத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.//

    ஆண்டின் நூறாவது பதிவிற்கு இனிய் வாழ்த்துகள்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரீ! “காற்று சும்மா இருக்கத்தான் நினைக்கிறது,
      மரம் அதை விடுவதிலலையே” எனும் கவிஞனல்லாத ஒரு பெரும் தலைவனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

      நீக்கு
  12. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...
    தங்களின் சிறப்பான பதிவுகள் தொடரட்டும்.
    உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் தான்
    எங்களுக்கு கிரியா ஊக்கி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே! உங்கள் வலைப்பக்கத்தை அசத்தலாக வடிவமைத்திருக்கிறீர்களே எப்படி? மிகவும் அருமை. அதில் சிலவற்றை நான் பயன்படுத்த உதவுவீர்களா நண்பரே? தங்களுக்குச் சிரமமேதும் இல்லையெனில் தனியஞ்சலில் தர வேண்டுகிறேன் -muthunilavanpdk@gmail.com

      நீக்கு
  13. இனிய கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு, வணக்கம்! தங்க்ள் நூறாவது பதிவு இன்று கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி.தங்கள் இலக்கிய வலைப்பதிவு தொடர வாழ்த்துக்கள்.ஆசிரியர் பணியிலிருந்து இவ்வாண்டு தாங்கள் ஓய்வுபெறுவது தாங்கள் முழுநேர இலக்கியப்பணியில் ஈடுபட ஒரு நல்லவாய்ப்பு. தொடரட்டும் தங்கள் இலக்கியப்பணி.-செ.நடேசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களோடு (1982?) பழனியில் பட்டிமன்றம் பேசியது நினைவில் நிழலாடுகிறது தலைவா! பகுதிநேரமாகப் பார்ப்பதையே இனி, வரும் மேயிலிருந்து முழுநேரமாகப் பார்கக வாய்ப்பு வருமே!

      நீக்கு
  14. தரம் மிக்க, அறிவு பூர்வமான, எளிய நடையுடன் கூடிய, சிறப்பான தங்களின் பதிவுகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!! மேன் மேலும் பல சிந்தனைகளும், பதிவுகளும் தொடர வேண்டும், வளர வேண்டும் என வேண்டி வாழ்த்துகிறேன்!!!

    பதிலளிநீக்கு