வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?



1)  வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது?






வம்சம்“ பாத்துட்டுத் தூங்கப் போயிட்டா அவங்க வயசானவுங்க. 
“ஆஃபீஸ்“ முடியிற வரைக்கும்     
முழிச்சிருந்து பாத்தா 
வாலிபப் புள்ளைங்க..



(2)  முற்போக்குன்னா என்ன? பிற்போக்குன்னா என்ன?  
      நம்ம பிள்ளைங்க டென்னிஸ் விளையாடுறாங்கல்ல? அதுல,
      ஆட்டத்தைப் பாத்தா முற்போக்கு, ஆடையைப் பாத்தா அது பிற்போக்கு.

(3)  ஆனந்த விகடன்-அமுதசுரபி ஒப்பிடுக
     ஆனந்த விகடன் படிச்சா யூத்து! அமுத சுரபி படிச்சா...மூப்பு..! (நினைப்புல?)

(4)  கடவுள் இல்லன்னு சிலபேர் சொல்றாங்களே இல்லங்கிறத நிருபிக்க முடியுமா?
      நல்லா இருக்கே கத! இந்த குடத்துல தண்ணி இருக்குன்னு சொல்றவங்கதான         நிருபிக்கணும். இல்லங்கிறவங்க குடத்தக் கவுத்துக்காட்டினா போதாதா?

(5)  அரசியல் சேவைக்காகவா? தேவைக்காகவா?
      தேச தேவைக்காக என்று ஆரம்பித்து தேக சேவைக்காகன்னு போயிருச்சே!           ஆனா அது அரசியல் இல்லிங்க... இன்னும் நல்ல அரசியல் வாதிங்க இருக்காங்க.. நீங்க சேவைக்காக்க் கேக்குறீங்களா  தேவைக்கு கேக்குறீங்களா?

      (கேள்வியும் நானே, பதிலும் நானே!-

       சத்தியமா ஆனந்தவிகடனுக்காக எழுதலீங்க... 
       நம்ம வலைப்பக்கத்துக்காகத்தான்...!)

தொடர்ந்து சீரியஸாவே எழுதிக்கிட்டிருந்தா 
நமக்கு வயசாயிட்டதா யாரும்  நெனச்சிறக்கூடாதில்ல.. ?

27 கருத்துகள்:

  1. நல்லாவே வித்தியாசமாக இருக்கு ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.
      பதிவைப் பதிவுசெய்த அடுத்த நிமிடமே பதில் போடுறீங்களே அந்த ரகசியத்தக் கொஞ்சம் சொல்லித்தாங்க அய்யா..

      நீக்கு
    2. கேள்வியும் நானே பதிலும் நானே...பார்வை மாறுபட்ட பதிவுகள்... ஆனால் பாதை மாறுபடாத நோக்குகள் .. வாழ்த்துகள் நிலவன்.

      நீக்கு
  2. தொடர்ந்து சீரியஸாவே எழுதிக்கிட்டிருந்தா
    நமக்கு வயசாயிட்டதா யாரும் நெனச்சிறக்கூடாதில்ல.. ?


    ------------

    இப்போ உங்களுக்கு வயசாயிடுச்சின்னு யார் சொன்னா...?

    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லீருவீங்களோன்னுதான்... ஏன் னா நமக்கு வயசாகுறது வேற யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாது பாருங்க...(இத நீங்க வேற யார்ட்டயும் சொல்லிடாதீங்க)

      நீக்கு
  3. அய்யாவிற்கு வணக்கம்..
    வலைப்பக்கத்தில் ”கேள்வியும் நானே பதிலும் நானே” வித்தியாசமான சிந்தனை அய்யா. தொலைக்காட்சி, விளையாட்டு, பத்திரிக்கை, சமூக சிந்தனை, அரசியல் எனும் அனைத்து துறையிலும் கேள்வி எழுப்பி விடையும் தந்தது தங்களது பல்துறை அறிவைப் பறைசாற்றுகிறது, அனைத்தும் படிக்கும் நீங்கள் எண்ணங்களில் என்றும் இளமை என்பது எனது கருத்து.. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடா.. எண்ணங்களில் இளமை. அப்படின்னா?
      சரி விடுங்க.. ரொம்ப யோசிக்கக் கூடாதில்ல...

      நீக்கு
  4. முற்போக்கு பிற்போக்குக்கான விளக்கம் சூப்பரோ சூப்பர்... ஹஹஹஹ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. எல்லாம் நம்ப “அழகு உபாசகர்கள்“ சொன்ன கருத்தின் அடிப்படைதான்..

      நீக்கு
  5. நமக்கு வயசாயிட்டதா யாரும் நெனச்சிறக்கூடாதில்ல.///ஆமாங்க இந்த பொம்பளைங்களுக்குத்தான் இப்படியெல்லாம் நினைச்சிடக் கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா... இல்லியா பின்ன? (ஆனா இப்புடிப் போட்டு உடைச்சிட்டீங்களே அய்யா?) நன்றி

      நீக்கு
  6. அனைத்துச் செய்திகளுமே அருமை ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா எழுதிப் பார்த்தேன். நம் நண்பர்கள் இதுமாதிரி விகடன் ல எழுதியிருக்கேன் பாருங்கம்பாங்க... நாமளும் பண்ணிப் பாப்பமேன்னுதான். நன்றி நண்பரே.

      நீக்கு
  7. இனிய வணக்கம் ஐயா...
    சுய பரிசோதனைக்காக நீங்கள் கேட்ட கேள்விகளை
    நானும் கேட்டுப் பார்த்து விடை அளித்துப் பார்த்தேன்..
    அட.. நமக்கும் வயசாகிக்கிட்டு வருதுபோல என்று புரிந்தது..
    சீரியஸாக இல்லாமல் சிரியசாக இருந்தாலும்
    சிந்திக்கவும் வைக்கிறது
    வினாவும் விடையும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான்...அதேதான்... (உங்களுக்கு வயசாகல ன்னு அப்பாஸை விட்டுப் படையப்பா சொல்ல வச்சிருப்பாருல்ல..?) நன்றி மகேந்திரன் அய்யா.

      நீக்கு
  8. வித்தியாசமான நானே கேள்வி நானே பதில் .நல்லாருக்கு வாழ்த்துக்கள் சார்.ஆனா டி.டி.சார் இப்படி தான் முதல் பதிவு போடுறாங்கனு தெரியல.பதிவு பண்ண அடுத்த நிமிடம் அவர் பார்க்கிறார்.அதிசயம்

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப நன்றி ...கமெண்ட்டையாவது எங்களுக்காக விட்டு வைச்சதுக்கு!
    டென்னிசில் உங்கள் இளமை ஊஞ்சலாடுவதை ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... மாப்பூ ... ஆப்பூ வசனம் நினைவுக்கு வருது..
      இருந்தாலும்...ரொம்ப நன்றி

      நீக்கு
  10. நல்ல பதிவு...

    திண்டுக்கல் தனபாலன் ரிட்லி ரீடரை பயன்படுத்தவதாக சொன்னார். அவர் பதிவிடும் வேகம் மட்டுமல்ல படிக்கும் வேகமும் அதிகம்..

    பதிலளிநீக்கு
  11. கலகலக்க வைத்தது பதிவு! வித்தியாசமாக எழுதி கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம பொதுவா கலகலப்பானவுங்கதான். ஆனா இருக்கிற நிலைமைகள் நம்மள சீரியஸா ஆக்கிடுதுல்ல... அதுலர்ந்து தப்பிச்சி அப்பப்ப இப்படி நாமலே கலகலப்பாக்கிக்கிறதுதான்... நன்றி

      நீக்கு
  12. பதில்கள்
    1. அடே அப்பா என்னா சந்தோசம்டா என் தங்கச்சிக்கு... இதுதான் நீ யூத்துங்கறது... தங்கை கிட்ட அண்ணனுக்கு வயசாகிட்டு வர்ரத ஒப்புக்கிறது தப்பில்லைடா... (நா வர்ர மே-10 அன்று பணி ஓய்வு பெறுகிறேன்மா... ) அப்பப்ப உன்ன மாதிரி இளைய சகோதர அன்பில் என் பணிகள் தொடரும்... நன்றிப்பா..

      நீக்கு
    2. பதிவேடுக்களில் பதிவாத வயது ,படைப்புகளில் மிளிர்வதுதான் வயது.,அண்ணனுக்கு வயசாச்சுன்னு நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் ,என்றாலும் உங்கள் இலக்கியப்பாதையை என்றும் தொடர்ந்திருப்பேன் எனும் நம்பிக்கையோடு -அன்பு தங்கை

      நீக்கு
  13. கேள்வியும் நானே பதிலும் நானே பார்வை மாறுபட்ட பதிவுகள் .. ஆனால் பாதை மாறுபடாத நோக்குகள்.

    பதிலளிநீக்கு
  14. அழகாத்தான் யோசிக்கிறீகங்கய்யா....




























    *********************

    பதிலளிநீக்கு