தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

“வீதி-50” விழா அழைப்பு
---------------------------------------------------
அண்டை மாவட்ட
அன்பு நண்பர்கள்
அவசியம் வருக!
“உண்மைத் தமிழனாயிருந்தால்” என்று சிலர் மிரட்டுவது போலன்றி,
உங்கள் G+, சுட்டுரை, முகநூல் 
வலைப்பக்கப் பதிவுகளில்

பகர்ந்து உதவுங்கள்
என்று
அன்புடன் வேண்டுகிறேன்
தொடர்புக்கு
நா.முத்துநிலவன்
ஒருங்கிணைப்பாளர் –
வீதி – கலைஇலக்கியக் களம்
புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

--------------------------------------------------------

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

உடல்தானம் படிவம் (BODY DONATION FORM)


உடல் தானம் செய்யும் படிவம் (BODY DONOR FORM)

புதுக்கோட்டை “வீதி-50” நிகழ்வையொட்டி, 50நண்பர்கள் உடல்தானம் மற்றும் கண்தானம் செய்வதென்று முடிவெடுத்து, படிவம் தேடி, அலைந்து, இறுதியாக திருச்சி தோழர் அரசெழிலன் அனுப்பினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அதே படிவம்தான் என்றும், நகலெடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இனி யாரும் உடல்தானப் படிவம் தேடி அலையக் கூடாது என்ற உறுதியில் இதோ யாரும் நகலெடுக்கும் விதமாக அதனை கூகுளாரிடம் ஒப்படைத்து, கேட்போருக்கெல்லாம் வழங்குக என்று கேட்டுக் கொள்கிறேன்…  
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!”
இணைப்பில் படிவங்கள் மற்றும் விதிமுறைகள் –

புதன், 28 மார்ச், 2018

என் மகன் எழுதிய சிறுகதை படிக்க வருக!


என் மகன் நிறைய நூல்களை – என்னை விடவும் ‘சீரியஸாக’- 
படிக்கிற பழக்கம் உடையவர்!

இதில் எனக்கு மிகவும் பெருமைதான்!


இப்போது அமீரகத்தில்  பணியிலிருந்துகொண்டு, 
வலைப்பக்கம் தொடங்கி 
முதலில் நூல்விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தவர், 
இப்போது 
சிறுகதை எழுதியிருக்கிறார்!
            இதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி!

வாருங்கள் நண்பர்களே!
அவரது வலைப்பக்கம் சென்று, 
கதையைப் படித்துக் கருத்திடுவதோடு,

அந்த வலைப்பக்கத்தை கலை-இலக்கியத்தோடு தமிழ்ச் சமூகத்திற்காக வளர்த்தெடுக்க நல்ல ஆலோசனைகளையும் நீங்கள் வழங்கவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.இதோ அவரது வலைப்பக்கம் -

ஆங்..! அப்புறம்...  
அவரது வலைப்பக்கத்தில் தொடர்வோர் (Follower) ஆகவும் சேர மறந்துவிடாதீர்கள்! என்ன…? விடாதீர்கள்!


“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” - குறள்
 


தோழமையுடனும், உரிமையுடனும்,
உங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன்.